முன்றாவுது இந்திய பெண் ஸ்ரீஷா.. விண்கலம் செல்கிறார்..

 இன்று விண்ணுக்கு பறக்க உள்ள விர்ஜின் கேலடிக் விண்கலத்தில் இந்தியாவை சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா என்ற பெண்ணும் விண்ணுக்கு செல்கிறார்.


விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான விர்ஜின் கேலடிக் இன்று விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சோதனை செய்ய உள்ளது. விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் சர் ரீச்சர்ட் பிரான்சன் மற்றும் குழுவினர் இதில் விண்ணுக்கு செல்கிறார்கள். இந்த நிறுவனத்தின் விஎஸ்எஸ் யூனிட்டி என்ற விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட உள்ளது.


விஎம்எஸ் ஈவ் என்ற இரட்டை எஞ்சின் கொண்ட கேரியர் விமானம் மூலம் இந்த ராக்கெட் விண்ணுக்கு ஏவப்படும். அதன்பின் 25 கிமீ உயரம் சென்ற பின் விஎஸ்எஸ் யூனிட்டி தனியாக கழன்று 90 கிமீ உயரம் வரை விண்ணுக்கு சென்று, பூமிக்கு திரும்பும். 4 நிமிடம் இந்த விஎஸ்எஸ் யூனிட்டி விண்கலம் விண்ணில் மிதக்கும்.

இந்தியா

இந்த விண்கலனில் விண்வெளிக்கு பறக்கும் ஸ்ரீஷா பண்ட்லா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் ஆந்திரா மாநிலத்தில் குண்டூரில் பிறந்தவர். 34 வயதாகும் இவர் பிறந்த சில மாதங்களுக்கு பின் பெற்றோருடன் குண்டூரில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸில் குடியேறினார். இன்று விண்ணில் பறக்கும் அவர் Researcher Experience என்ற பொறுப்பை பெற்றுள்ளார்.


பறக்கிறார்

விண்ணில் பறக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை ஆராயவும், அது குறித்து பரிசோதனைகளை செய்யவும், முடிவுகளை வெளியிடவும் இவர் இன்று விண்ணுக்கு பயணிக்கிறார். விர்ஜின் கேலடிக் நிறுவனம் எதிர்காலத்தில் மக்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளது. இதற்கு இப்போதே புக்கிங் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் விர்ஜின் கேலடிக் விண்கலத்தில் மனிதர்களின் விண்வெளி பயணம் எப்படி இருக்கும் என்பதை பதிவு செய்வதற்காக ஸ்ரீஷா விண்ணுக்கு இன்று பறக்கிறார்.

முடியாது

சாதாரணமாக பார்க்க முடியும் என்றாலும் கூட இவரின் பார்வை ஒரு பைலட்டிற்கு ஏற்ற கூர்மையானது கிடையாது. இதனால் நாசா மற்றும் அமெரிக்க ஏர்போர்ஸ் டெஸ்டில், இவருக்கு போதிய கண் தெரியவில்லை என்று கூறி பைலட் தேர்வில் இருந்து புறக்கணித்தனர். அதன்பின் தன்னால் விண்ணுக்கு செல்லவே முடியாது என்று உடைந்து போன ஸ்ரீஷா தற்போது விர்ஜின் கேலடிக் நிறுவனம் மூலம் விண்வெளிக்கு செல்கிறார்.

மூன்றாவது பெண் 

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸுக்கு பின் விண்வெளிக்கு பறக்கும் மூன்றாவது இந்திய பெண் இவர்தான். எனக்கு கிடைத்த வாய்ப்பு மிகப்பெரியது. இதற்காக முறையாக பயிற்சி மேற்கொண்டு இருக்கிறேன். பல்வேறு துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் விண்ணுக்கு செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, என்று ஸ்ரீஷா குறிப்பிட்டுள்ளார்.


Comments