கோபா அமெரிக்கா கோப்பையை கையில் ஏந்தினார் லயோனல் மெஸ்ஸி… பிரேசிலை வென்று அர்ஜென்டினா சாதனை!


 

28 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை கையில் ஏந்தியிருக்கிறது அர்ஜென்டினா. அதுவும் ‘கிளப் அணிகளுக்காக மட்டுமே கோப்பையை பெற்றுத்தருவார், நாட்டுக்காக எதுவும் செய்யமாட்டார்’ என விமர்சிக்கப்பட்ட லயோனல் மெஸ்ஸி கோப்பையை கையில் ஏந்தியிருக்கிறார்.


கோபா அமெரிக்கா கோப்பையின் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. இதில் அமெரிக்க கண்டத்தின் முக்கிய கால்பந்து தேசங்களான அர்ஜென்டினாவும், பிரேசிலும் மோதின. கோபா அமெரிக்காவின் நடப்பு சாம்பியனான பிரேசில், 1993-க்குப்பிறகு கோபா அமெரிக்கா கோப்பையையே வெல்லாத அர்ஜென்டினாவை தங்கள் சொந்த மண்ணில் சந்தித்தது. இதனால் பிரேசிலின் பக்கமே வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது






Comments