ஜீன்ஸ் பேண்ட், ஸ்டைலான டி-ஷர்ட்டில் நடிகர் சிவாஜி - இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்று

 தமிழ் திரையுலகில் நடிப்பிற்கு உதாரணமாக முதலில் கூறுவது நடிகர் திலகம் சிவாஜி அவர்களை தான்.


இவர் நடிப்பில் வெளியான தில்லானா மோகனாம்பாள் முதல் பாசமலர் வரை பல திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.


1952ஆம் ஆண்டு துவங்கிய இவரது திரையுலக பயணம் 1999ஆம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தில் தான் முடிந்தது.


சிவாஜியுடன் இணைந்து ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.


நடிகர் சிவாஜியை பல கெட்டப்பில் நாம் பார்த்திருப்போம். இந்நிலையில் வெளிநாட்டில், ஜீன்ஸ் பேண்ட், ஸ்டைலான டி-ஷர்ட்டில் மாஸாக போஸ் கொடுக்கும் சிவாஜியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 



Comments