‛டி20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர்,ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ) நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த ‛டி20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர், கோவிட் பரவலால், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ) நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலக கோப்பை ‛டி20' கிரிக்கெட் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், நாடு முழுவதும் கோவிட் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கோவிட் பரவல் காரணமாக உலக கோப்பை தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

 இதற்கிடையே கோவிட் பரவலால் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரசு எமிரேட்சில் (யு.ஏ.இ) நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது. அதேபோல், உலக கோப்பை தொடரையும் வேறு நாட்டுக்கு மாற்றப்படும் என செய்திகள் வெளிவந்தன.

 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக யு.ஏ.இ.,யில் ‛டி20' உலக கோப்பை தொடர் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இந்த தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) இன்று பிசிசிஐ தெரிவித்துள்ளதாகவும், உலக கோப்பை தொடரை எப்போது நடத்துவது என்ற முடிவை ஐசிசி எடுக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

 

Comments