டி 20 உலக கோப்பை 2021 தேதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.


டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த டி20 உலகக்கோப்பை கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு 2021ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவிலும் கொரோனா அச்சுறுத்தலாக இருப்பதால் போட்டிகளை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய தேதிகள்

கொரோனா காரணமாக இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடத்துவதில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே புதிய இடத்தை தேர்ந்தெடுப்பது குறித்து பதிலளிக்க பிசிசிஐ-க்கு ஜூன் 27ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது ஐசிசி அமைப்பு.

 இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரை வரும் அக்டோபர் 14ம் தேதி தொடங்கவிருப்பதாகவும், அக்டோபர் 14ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கும் என கூறப்படுகிறது.


Comments